Introduction
வணக்கம் உறவுகளே
மனிதராய் நாம் பிறந்ததிற்கு தவம் செய்திருக்க வேண்டும் .கடவுள் நம்மை தேர்ந்தெடுத்து மனித பிறவியில் பிறக்க வைத்திருக்கிறார் .அதிலும் இந்த தொழில் நுட்ப வசதிகள் இருக்கும் காலத்தில் நாம் இருக்கின்றோம் .அனைத்து வசதிகளுமே நம் விரல் சொடுக்கில் வந்து விட்டது .எனினும் மனிதன் எதையோ தொலைத்தது போலவே இருக்கின்றான் . அதற்கு காரணம் தான் என்ன ?
எல்லாம் அவனிடம் இருந்தும் எதையோ தேடி தேடி அலைந்து கொண்டே இருக்கின்றான் . வாழ்க்கை அனைத்தும் தேடலிலே அவனுக்கு முடிவடைந்து விடுகிறது . என்னதான் மனிதனின் தேடல்? எதை கொண்டுதான் அவனை திருப்திபடுத்த முடியும் ? ஒவ்வொரு மனிதனின் திருப்தியும் வேறுபடும் . உதாரணத்திற்கு ஒரு குழந்தையின் திருப்தி அதனுடைய தாயினிடம் உள்ளது . மனிதனின் எண்ணம் பெருக பெருக அவனுடைய ஆசைகள் பெரிதாகி கொண்டு இருக்கிறது . ஆசைகள் பெருக பெருக கஷ்டங்களும் பெருகி கொண்டு இருக்கிறது . இங்கு ஆசைகளை அடக்கி வாழுகின்ற மனிதர்கள் அரிதிலும் அரிது .
அனைத்து மதங்களுமே மனிதனுக்கு போதிக்கின்ற ஒரு விஷயம் ஆசையை அடக்குவது பற்றிதான். ஆனால் நாம் யாரும் அதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை அதற்கு காரணம் நாம் தான் .
எனக்கு தெரிந்த சில விஷயங்களை இதிலே உங்களுக்காக சொல்கிறேன் நேரம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள் . வாழ்க்கை வாழ்வதற்கு அதை அர்த்தமுள்ளதாக வாழுங்கள் .
இதோ சில வழிகள்

ஒப்பிடுதல்
முதலில் நாம் ஒப்பிடுவதை விட்டு விட வேண்டும் .அனைவரின் வாழ்க்கையுமே வித்தியாசமானது .இறைவன் ஒருவருக்கு பணம் அதிகமாக கொடுத்திருப்பான் ஒருவருக்கு நல்ல அறிவை கொடுத்திருப்பான் இன்னும் சிலருக்கு நல்ல உடல் தோற்றத்தை கொடுத்திருப்பான் .இங்கு அனைவருமே ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள்தான் . முதலில் நாம் நம்மை விரும்ப வேண்டும் அப்போதுதான் நம் வாழ்க்கை நம்மை விரும்பும் . ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தங்களுக்கு கிடைத்ததை எண்ணி சந்தோசப்படாமல் அடுத்தவர்களுக்கு இப்படி கிடைத்து விட்டதே என எண்ணி கொண்டு தங்களுடைய வாழ்க்கையை தாங்களே கஷ்டம் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள் . முதலில் நமக்கு கிடைத்த பொருளை வைத்து சந்தோசப்பட கற்று கொள்ளுங்கள் வாழ்க்கை தானாக அழகாக மாறும் .
விட்டுக்கொடுத்தல்
இந்த குணம் இருக்கும் மனிதன் வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பான் . விட்டுக்கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாறுகிறது .ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இந்த குணம் படைத்த மனிதர்களை காண்பது அரிது . காரணம் சுயநலம் பொதுநலத்தை மிஞ்சிய காலமாக இக்காலகட்டம் மாறிவிட்டது . நமக்கே அனைத்தும் கிடைக்கவேண்டும் ,நாம் கூறுவதுதான் சரி நமக்குத்தான் அனைத்தும் தெரியும் என்ற எண்ணங்களே மனிதனிடம் மிகைத்து இருக்கிறது . இந்த எண்ணத்தை முதலில் நாம் நம் மனதில் இருந்து அகற்ற வேண்டும் . இங்கு அனைத்தையும் அறிந்த எவனும் இல்லை ,ஒன்றும் தெரியாமல் இருப்பவனும் இல்லை .முதலில் நாம் இந்த விட்டுக்கொடுக்கும் பழக்கத்தை நம் வீட்டில் இருந்து கற்று பழகவேண்டும் .பெற்றோர்களிடம் முதலில் நாம் விட்டுக்கொடுத்து பழகவேண்டும் .ஏனெனில் தாய் தந்தைக்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவும் இல்லை. விட்டுக்கொடுக்கும்போது ஏற்படுகின்ற சந்தோசம் வேறு எந்த செயலிலும் நம்மால் பெறமுடியாது .எனவே வாழ்க்கையில் விட்டு கொடுத்து பழகுங்கள் வாழ்க்கை உங்களுக்காக அனைத்தையும் விட்டு கொடுத்து உங்கள் காலடியில் கிடக்கும்.
போதுமென்றமனம்
இந்த குணம் உங்களிடம் வந்துவிட்டால் கவலை உங்களை அண்டாது . ஆனால் இதை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல .கிடைத்ததை வைத்து சந்தோசப்படுவது என்பது மிகவும் அழகான செயலாகும் .இந்த பண்பினை நாம் வளர்த்து கொண்டால் எல்லாமே நமக்கு இலகுவாக இறைவன் அமைத்து தருவான் . இந்த குணம் உங்களுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால் இந்த ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் "இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை" , "இதுவும் கடந்து போகும் ". உண்மையான அன்பும் மனிதநேயமும் மட்டுமே என்றும் நிலைத்திருக்கும் . நல்ல குணங்கள் எண்ணங்களை நமக்குள் நாமே வளர்த்து கொள்ள வேண்டும் அனுதினமும் இறைவனை தொழுது உதவி தேடவேண்டும் . அதேபோல் நம்மாலான உதவியை அடுத்தவருக்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யவேண்டும் .
இறுதியாக ஒன்று
"எண்ணம்போல் தான் வாழ்க்கை ,நிச்சயமாக நம் எண்ணம்போல் தான் நம் வாழ்க்கை "
நன்றி

Comments
Post a Comment